🔴🇬🇧லண்டனில் தமிழ் குடும்பத்திற்கு ஏற்பட்ட நிலை! காவல்துறையின் அதிரடி!

லண்டன் நெடுஞ்சாலையான ஏ- 3ல் , கிங்ஸ்டன் நோக்கிச் செல்லும் சாலையில் 4 பேராக காரில் சென்ற தமிழ் குடும்பம் ஒன்றை லண்டன் மெற்ரோ பொலிடன் பொலிசார் மறித்துள்ளார்கள். அவர்கள் தமது உறவினர்களை பார்க்க சென்றவேளையே இவ்வாறு வழி மறிக்கப்பட்டுள்ளார்கள்.

பொலிசார் வினவிய வேளை, அவர்களால் சரியான காரணத்தை கூற முடியவில்லை என்பது போக. குடும்பத்தில் உள்ள 4 பேரும் காரில் இருந்துள்ளார்கள். இதனை அடுத்து லாக் டவுனை மீறியுள்ளார்கள் என்றும். தேவை இல்லாமல் அவர்கள் வெளியே சென்றுள்ளார்கள் என்ற குற்றத்திற்காகவும், அவர்களுக்கு 200 பவுண்டுகள் தண்டப் பணத்தை பொலிசார் அறவிட்டுள்ளார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

தமிழர்களே நீங்கள் வெளியே புறப்படும் போது சரியான காரணத்தை காட்ட தவறவேண்டாம். மேலும் காரில் உள்ள அனைவரும் ஒரே மாதிரியான பதிலையே சொல்ல வேண்டும் என்பதனையும் மறக்க வேண்டாம். உங்கள் குடும்ப உறுப்பினர்களே சொதப்பினால், தண்டம் நிச்சயம் என்றாகிவிடும்.