பிரித்தானிய பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! அதிகரிக்கும் அதிகாரங்கள்!

பிரித்தானியாவில் நேற்றைய தினம்(09) 2 கைதுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். காற்று வாங்க என வீட்டுக்கு வெளியே வந்து பொது இடம் ஒன்றில் வாங்கில் இருந்த பெண்ணையே பொலிசார் இவ்வாறு கைதுசெய்துள்ளார்கள்.

கொரோனா லாக் டவுன் சட்ட திட்டங்களை மீறினார் என்று பொலிசார் அவரை கைது செதுள்ள அதேவேளை பூங்காவில் அமர்ந்திருந்த மற்றும் ஒரு நபரும் கைதாகியுள்ளார்கள்.

இருவரையும் கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்ற பொலிசார், £200 பவுண்டுகள் தண்டப் பணத்திற்கான, டிக்கெட்டுகளை கொடுத்துள்ளார்கள். இது போக பொலிசாருக்கு தற்போது மேலும் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.