மக்கள் சொல்பேச்சு கேட்க்கவில்லை! NHS கவலை!

இன்னும் சில தினங்களில் கொரோனா தொற்று படு மோசமான நிலைக்கு செல்ல உள்ளதாகவும். 3வது லாக் டவுனை மக்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் சுகாதார துறை கவலை வெளியிட்டுள்ளது.

இதனால் நிலமை மேலும் மோசமடையும் என்றும். பலர் இறக்க கூடும் என்றும் பிரித்தானிய சுகாதார துறையினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

மக்கள் 3வது லாக் டவுனை அசட்டை செய்துவிட்டு, வீதிகளில் இன்னும் நடமாடி வருவதாக கூறப்படுகிறது. இதனால் இன்று முதல் பொலிசார் மேலும் பல கெடு பிடிகளை கையாள உள்ளதாக இலக்கம் 10 டவுனிங் வீதி நிர்வாகம் தெரிவித்துள்ளதோடு.

கொரோனா பற்றிய விழிப்புணர்வு விளம்பரத்தை அதிகரிக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாக சற்று முன்னர் தகவல்கள் வெளியாகியுள்ளது.