🔴🇬🇧என்ன மாதிரியும் கேவலப்படுத்தட்டும் நான் கையெழுத்து போட மாட்டேன்!மகாராணியார்!

அணு குண்டு ஒன்றை தூக்கிப் போட்டு, பிரித்தானிய அரச குடும்பத்தை அப்படியே வெடிக்க வைத்துள்ளார் இளவரசர் ஹரி. நேற்றைய தினம் அவரும் அவரது மனைவி மெகான் மார்களும் இணைந்து கொடுத்த TV நிகழ்ச்சி லண்டனிலும் ஒலிபரப்பாகியது. சுமார் 17 மில்லியன் பேர் இதனைப் பார்த்துள்ளார்கள் என்பது பெரும் ஆச்சரியமான விடையம். அந்த நிகழ்சியில் அரச குடும்பத்தை படு கேவலப்படுத்தி கூறியுள்ள மெகான் மார்கிள். அரச குடும்பம் ஒரு நிறவெறி பிடித்த குடும்பம் என்றும்.

தனக்கு பிறக்க இருக்கும் பிள்ளையின் நிறத்தை கூட கணக்கு போட்டு பார்த்தார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் தனது மகனுக்கு பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் அரச குடும்ப அங்கத்தவர்கள் கூறினார்களாம். ஆனால் இவை எதனையும் அல்லது நிற வேறுபாட்டை மகாராணியாரோ இல்லை அவரது கணவர் பிலிப்போ காட்டவில்லை என்றும். அவர்கள் இருவரும் மிகவும் நல்லவர்கள் என்று மெகான் மார்கள் கூறியுள்ளார்.

இதனால் ஹரியின் தந்தை சார்ளஸ், அவரது காதலி கமீலா பாக்கர், அண்ணா வில்லியம் அவரது மனைவி கேட், மற்றும் சித்தப்பா அன்ரூ, ஆகியோர்களே மெகான் மார்களை கொடுமைப் படுத்தி இருக்க வேண்டும் என்று நம்பப் படுகிறது.

இன் நிலையில் பக்கிங்ஹாம் அரன்மனை நிர்வாகம், மறுப்பு செய்தி ஒன்றை உடனடியாக தயாரித்து அதனை வெளியிட முற்பட்டது. அதற்கு மகாராணியாரின் கையொப்பம் தேவை. ஆனால் அதனை வாசித்த மாகாராணியார் கையொப்பம் போடவில்லை. கோழி மிதித்து குஞ்சு சாகுமா என்ற கணக்கில், என்ன தான் பேசுகிறார்கள் பார்போமே என்று பெருந்தன்மையோடு விட்டி விட்டார் மகாராணியார். இதுவும் ஒரு வகையில் மெகானுக்கு கொடுக்கப்படும் ஒரு அடி தான் என்கிறார்கள் சிலர். ஏன் எனில் உங்களை நாம் கணக்கில் எடுக்கவே இல்லை என்று மகாராணி காட்டியுள்ளார். பனம் காட்டு நரி. இந்த சல சலப்புக்கு எல்லாம் நான் அஞ்சமாட்டேன் என்ற நிலையில் உள்ளாரோ மாகாராணியார் தெரியவில்லை ?