மாகாண முதல்வரிடம் உதவி கோரும் பிரான்ஸ்…!!!!!

இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse அரசிடம் பாரிஅளவுநிதியைஉதவித்தொகையாக கோரியுள்ளார் சுகாதார சீர்கேடுகளால் இல் து பிரான்சின் பொது போக்குவரத்துக்கள் பாரிய வருவாய் இழப்பை சந்தித்துள்ளன.

பிரான்ஸ் பொதுபோக்குவரத்து Ile-de-France Mobilités நிறுவனத்தின் தலைவரும் இல் து பிரான்ஸ் மாகாண முதல்வருமான Valérie Pécresse இந்த வருவாய் இழப்பை சரிசெய்ய அரசு உதவிக்கரம் நீட்டவேண்டும் எனவும் கிட்டத்தட்ட 1.3 பில்லியன் யூரோக்களை உதவித்தொகையாக வழங்கவேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த 1.3 பில்லியன் உதவித்தொகை 100% வீத வருவாய் இழப்பு கோரிக்கை ஆகும் 2021 ஆம் ஆண்டில் 1 பில்லியன் யூரோக்கள் வணிக வருவாய் இழப்பும் மீதமான 300 மில்லியன் யூரோக்கள் சம்பளம் வெகுஜன வரி உள்ளிட்ட இழப்பீடுகளை சரிசெய்வதற்காக என Valérie Pécresse தெரிவித்துள்ளார்.