🇫🇷 🔴 பிரான்சில் மாகணசபைத்தேர்தல்.!! இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு பதிவு.!!!

இன்று ஞாயிற்றுக்கிழமை மாகாண சபைத்தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு பதிவாகின்றது. காலை 8 மணிக்கு வாக்குச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளது.

கடந்தவாரம் இடம்பெற்ற முதல்கட்ட வாக்கெடுப்பின் போது பெருவாரியான மக்கள் வாக்குச்சாவடிக்கு வருகை தரவில்லை. மிக மோசமான எண்ணிக்கையிலேயே வாக்குகள் பதிவாகியிருந்தன. இதற்க் பல அரசியல் கட்சி தலைவர்களின் இருந்து.. பிரதமர் மற்றும் ஜனாதிபதி வரை கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று இரண்டாம் கட்ட வாக்கெடுப்பிற்காக காலை 8 மணியில் இருந்து வாக்குச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன.

வாக்குச் செலுத்த 45 மில்லியன் மக்கள் தகுதியுடையவர்களாக இருக்கின்றனர்.