பிரான்சில் மாகாணசபைத் தேர்தல் பிற்போடப்படுமா?????

இவ்வருடத்தில் இடம்பெற உள்ள மாகாணசபைத் தேர்தல் பிற்போடப்படுவதற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது பத்துவரையான மாகாண தலைவர்கள் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.

அவர்களில் இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse உம் ஒருவர் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக இந்த இந்த தேர்தலை பிற்போடுமாறு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் இவ்வருடத்தின் ஜூன் 13 ஆம் திகதி முதலாம் கட்ட வாக்கெடுப்பும் ஜூன் 20 ஆம் திகதி இரண்டாம் கட்ட வாக்கெடுப்பும் இடம்பெற உள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாகாண முதல்வர்களின் கோரிக்கைக்கு தேர்தல் ஆணையமும் அரசும் செவி சாய்க்குமா என்பதை காத்திருந்து தான் அறிந்துகொள்ள வேண்டும்.