🇫🇷 இரக்ககுணமுடைய மக்ரோன்….! மகிழ்சியில் சிறார்கள்…!!!

பிரான்ஸில் அனைத்து மாணவர்களுக்கும் €1 யூரோவுக்கு உணவு வழங்கப்படும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார் ஒரு மாணவர் நாள் ஒன்றுக்கு இரண்டு உணவுகளை இந்த விலைக்கு பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி சற்று முன்னர் அறிவித்தார்.

கொரோனா வைரஸ் காரணமாக மிக இறுக்கமான சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இன்று ஜனவரி 21 ஆம் திகதி வியாழக்கிழமை பரிசில் உள்ள l’université Paris-Saclay பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

அதேவேளை இரண்டாம் தவணையின் போது பாடசாலை 100% வீதம் இயல்புக்கு திரும்ப வாய்ப்பில்லை எனவும் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.