🔴புகலிட கோரிக்கையாளர்கள் பிரியா – நடேஸ் தம்பதியின் மகள் மருத்துவமனையில்!

கிறிஸ்மஸ் தீவு அகதிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பிரியா – நடேஸ் தம்பதிகளின் இரண்டாவது மகள் தருணிகா(3) பெர்த் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கு குருதித்தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனவும் மேலதிக சிகிச்சை பெற்றுக்கொள்ளும் பொருட்டு தருணிகா பெர்த் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கிறிஸ்மஸ் தீவில் கடந்த பத்து நாட்களாக தருணிகா கடும் காய்ச்சல்,வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. இதனை அடுத்து மேலதிக சிகிச்சைக்கு கிறிஸ்மஸ் தீவு மருத்துவர்கள் பரிந்துரை செய்ததால் தருணிகா பெர்த்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.