🇫🇷பிரான்சில் ஜனாதிபதி மக்ரோன் இன்று உரையாற்றுகின்றார்!!!!….

இன்று புதன்கிழமை இரவு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்காக உரையாற்றுகின்றார் கொரோனா வைரசினால் கிட்டத்த ஒட்டுமொத்த துறைகளுமே முடங்கிப்போயுள்ள நிலையில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மீது வெளிப்படையாகவே குற்றம் சாட்டி வருகின்றனர்.

மருத்துவமனை நிலவரங்கள் கடந்த சில நாட்களாக மிக கவலையளிக்கக்கூடிய நிலையில் இருந்து வருவதால் புதிய கட்டுப்பாடுகள் குறித்து அரசின் அறிவிப்பை மக்களும் ஏனைய துறையினரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று புதன்கிழமை இரவு 8 மணிக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்காக உரையாற்றுகின்றார் எலிசே மாளிகை இத்தகவலை சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.

இன்றைய உரையில் நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் மூடுவது தொடர்பாக ஜனாதிபதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது (ஜனாதிபதியின் உரையை எமது வாசகர்கள் நேரலையாக பரிஸ்தமிழ் இணையத்தில் உடனடிக்குடன் படிக்கலாம்)