🔴 🇫🇷 ஜனாதிபதி மக்ரோன்க்கும் பிரதமர் ஜோன்கஸ்தெக்ஸ்க்கும் கடும் வார்த்தை போர்…காரணம்…???

பிரான்சில் கொரோனத் தொற்று அதியுச்சமாக அதிகரித்து பிரான்சின் சுகாதார நிலை மிகவும் சீர்கெட்டுள்ளது வைத்தியசாலைகளில் அபாயமணி ஒலித்துள்ளது மேலதிக நோயாளிகளை உள்வாங்க முடியாத நிலை இல்-துபிரான்சிலும் மேலும் பல மாகாணங்களிலும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிம் பிரான்சினை கடுமையான உள்ளிருப்பிற்குள் கொண்டு வர இன்னமும் எமானுவல் மக்ரோன் தயங்கி வருகின்றார் vஇதனால் பிரதமர் ஜோன் கஸ்தெக்ஸ் மற்றும் பிரான்சின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் ஆகியோர் ஜனாதிபதியைக் கிடுக்கிப் பிடி பிடித்துள்ளனர்.

‘நெருப்போடு விளையாடுவதை நிறுத்துங்கள்’ என பிரதமரும் சுகாதாரத் துறை அமைச்சரும் இன்று கூடிய அவசர சுகாதார பாதுகாப்புச் சபையில் எமானுவல் மக்ரோனை எச்சரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.