🔴🇫🇷பிரான்ஸ் ஊரடங்கு தளர்வு நெருங்கும் நேரத்தில் மக்ரோனின் முக்கிய அறிவிப்பு!

நாங்கள் எதையும் வென்றுவிடவில்லை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார். சற்று முன்னர் பிரதமர் Jean Castex சில தளர்வுகளை அறிவித்திருந்தார். அதில் வரும் ஜூன் 20 ஆம் திகதியுடன் இரவுநேர ஊரடங்கு தளர்த்தப்படுவதாகவும், நாளை முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை அடுத்து ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவிக்கும் போது, நாம் எதையும் வென்றுவிடவில்லை. இந்த நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்திய வைரசை முற்றாக ஒழிக்க, தடுப்பூசிகள் போடுவது மிக அவசியமாகும். தடுப்பூசி போடுவதை நிறுத்தவேண்டாம். அதை நான் மிகவும் வலியுறுத்துகிறேன்!’ என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்தார்.