♦️🇫🇷பிரான்ஸில் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமா? மக்ரோனின் முக்கிய அறிவிப்பு!

தடுப்பூசி போட்டுக்கொள்வதை கட்டாயமாக்கவேண்டுமா? எனும் கேள்வி, இரண்டாவது நாளாக Lot மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனிடம் கேட்க்கப்பட்டது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இதற்கு பதிலளிக்கும் போது தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்க வேண்டுமா…? நான் அப்படி நினைக்கவில்லை.

பிரெஞ்சுகாரர்களை பொறுத்தவரை, ஒரு விடயத்தை கட்டாயப்படுத்தும் போது அவர்கள் அதற்கு இணங்குவதில்லை. அதேவேளை, அவர்களுக்கு சுதந்திரத்தை வழங்கிவிட்டு நாம் அவர்களை சமாதானப்படுத்தி நம்ப வைக்கவேண்டும்! அப்போது தான் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்! என ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.
அதேவேளை, 80-90 % வீதமான நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டால் மாத்திரமே கூட்டு எதிர்ப்பு சக்தி மூலம் கொரோனாவை இல்லாதொழிக்க முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர் எனவும் மக்ரோன் தெரிவித்தார்.