♦️🇫🇷பிரான்ஸ் சமூகம் பதற்றத்தில் உள்ளதா? மக்ரோனின் கருத்து என்ன?

இன்று ஜனாதிபதியைத் தாக்கியவரிற்குத் தண்டனை வழங்கப்பட்டு உடனடியாக சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், எமானுவல் மக்ரோன் ஊடகங்களின் கேள்விகளிற்குப் பதிலளித்துள்ளார். பிரெஞ்சுச் சமூகம் பெரும் பதற்றமான தருணத்தில் தற்போது இல்லை என நாம் நம்புகின்றேன். என வன்முறையாளன் பற்றிய கேள்விக்கு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பிரெஞ்சு மக்கள் இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் மிகவும் களைத்துப் போய், பயத்துடன், சந்தேகத்துடன், பதட்டத்துடன், தனிமையின் தாக்கங்களுடன் உள்ளார்கள் என்பதை நான் அறிவேன்
ஆனால் பிரெஞ்சுச் சமூகத்தில் பரவலான சமூக வன்முறையை நான் உணரவில்லை.

இது உண்மை வன்முறை என்பது என்மீது கட்டவிழ்க்கப்பட்டது அல்ல. ஆனால் இன்று பல பெண்கள் குடும்ப வன்முறைக்கு, துணைவர்களின் வன்முறைக்கு உள்ளாகின்றனர். இதுதான் வன்முறை. இதற்கு தகுந்த நிரந்தமான கடுமையான பதில் தேவை. இதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்கும் காவற்துறையை நான் பாராட்டுகின்றேன்.ஒவ்வொரு முறையும் மிகவும் துரிதமான நடவடிக்கை தேவை
என பிரெஞ்சுச் சமூகத்தின் அச்சத்தினையும் வன்முறையையும் ஜனாதிபதி தனது பார்வையில் தெரிவித்துள்ளார்.