⚫🇫🇷பிரான்ஸ் ஜனாதிபதியின் முக்கிய கோரிக்கை!

உள்ளிருப்பு வெளியேற்ற காலத்தில் மிக அவதானமாக இருக்கும் படி ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கோரிக்கை வைத்துள்ளார். நேற்று புதன்கிழமை Aube நகருக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அங்கு வைத்தே இதனை தெரிவித்தார்.

”இன்று நாம் வலுவான காரணத்தோடு வெளியில் வந்துள்ளோம்! ஆனால் நாம் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும். ஏனென்றால் நாம் வெற்றியின் ஒரு பகுதியில் தான் உள்ளோம்.” என தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், “விரைவில் நாம் முழுமையான வாழ்வுக்கு திரும்புவோம் என நம்புகின்றேன்!” எனவும் மக்ரோன் ஊடகத்தினரிடம் தெரிவித்தார்.