⚫🇫🇷இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிப்போம்! மக்ரோன் உறுதி!

ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபுலை தலிபான்கள் ஆக்கிரமித்ததை அடுத்து, நேற்று ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தொலைக்காட்சியில் உரையாற்றினார். அதில் அவர் தெரிவிக்கும் போது, ‘ஆஃப்கானிஸ்தான் மக்களுக்கு பிரான்ஸ் ஆதரவாக செயற்படும்!’ என உறுதியளித்தார்.

ஆஃப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாதிகளின் கூடாரங்கள் ஆகிவிடக்கூடாது. இதற்காக அமெரிக்கா மற்றும் இரஷ்யாவுடன் இணைந்து பிரான்ஸ் செயற்படும். அதேவேளை, ஒழுங்கற்ற சட்டவிரோத குடியேற்றங்களை தவிர்க்கவும் பிரான்ஸ் முனைப்புடன் செயற்படும்!” என இம்மானுவல் மக்ரோன் அறிவித்தார்.


ஆஃப்கானிஸ்தான் மக்கள் பாதுகாப்பாக வாழவும், ஆஃப்கானிஸ்தான் பெண்கள் சுதந்திரமாகவும் கண்ணியமாகவும் வாழ உரிமை உண்டு!’ எனவும் தெரிவித்த மக்ரோன், ‘இஸ்லாமிய பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கு எதிராக போராடும் முதல் நாடாக பிரான்ஸ் உள்ளது!” எனவும் தெரிவித்தார் .