♦️🇫🇷ஐனாதிபதி மக்ரோனின் திடீர் பயணம்! வெளியான முக்கிய தகவல்!

இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் Drôme மாவட்டத்துக்கு பயணமாகின்றார்.
அங்குள்ள Bistrot des Clercs எனும் உணவகத்தில் இன்றைய மதிய உணவை சாப்பிட உள்ளார். அவருடன் சேர்ந்து மேலும் 50 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருமே பல்வேறு பகுதிகளைச் சேத்ந்த உணவக உரிமையாளர்கள் ஆவர்.

இவர்களில் எலிசே மாளிகையின் முன்னாள் chef, Guillaume Gomez மற்றும் பரிசின் பிரபல chef, Thierry Marx உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர். உணவகத்தின் முற்றங்கள் மாத்திரமே தற்போது திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உணவகங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து உரையாடுவதற்காகவே இந்த ‘விருந்து’ இடம்பெறுகின்றது. இன்று இடம்பெற உள்ள இந்த விருந்தும் உணவக முற்றத்திலேயே இடம்பெற உள்ளது. பின்னால் மலையும், அருவியும் உள்ள ஒரு பகுதியில் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.