🇫🇷 பிரான்சில் மலையேற்ற இளம் வீரர் உயிரிளப்பு.!!!!!

இளம் மலையேற்ற வீரர் ஒருவர் 500 மீற்றர் ஆழத்தில் விழுந்து சாவடைந்துள்ளார் இச்சம்பவம் massif du Mont-Blanc Haute-Savoie மலைக்குன்றில் இடம்பெற்றுள்ளது நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒக்டோபர் 24 ஆம் திகதி நண்பர்கள் இருவர் இணைந்து மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராவிதமாக அவர்களில் 20 வயதுடைய ஒருவர் விபத்துக்குள்ளாகி சாவடைந்துள்ளார் அவரின் நண்பர் உதவிக்குழுவை அழைத்துள்ளார் Le Peloton de gendarmerie de haute montagne de Chamonix அதிகார்கள் சம்பவ இடத்துக்கு சென்றிருந்த போது இளைஞன் முன்னதாகவே இறந்துள்ளதை உறுதி செய்தனர்.

கிட்டத்தட்ட 500 மீற்றர் தூரம் அவர் கீழே விழுந்து சாவடைந்துள்ளார் அவரின் நண்பர் மீட்க்கப்பட்டுள்ளார் அவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.