கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் உள்ள மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை…!!!!!

கொரோனா வைரஸ் காரணமாக இல் து பிரான்ஸ் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது குறிப்பாக தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டில்கள் வேகமாக நிரம்பி வருகின்றன கடந்த ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 300 கட்டில்கள் நிரம்பியுள்ளன இந்த எண்ணிக்கை வரும் வாரத்தில் 400 ஆக அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று இல் து பிரான்சுக்குள் அதிகரித்து வருவதால் பிராந்திய சுகாதார நிறுவனம் பலத்த நெருக்கடியை சந்தித்து வருகின்றதாகவும் தற்போது 5,352 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் நேற்று ஒரே நாளில் 66 பேர் புதிதாக மருத்துவனனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.