பிரான்சில் “ARGENTEUIL” மருத்துவமனைக்கு பிரதமர் “JEAN CASTEX” திடீர் விஜயம் மேற்கொண்டார்..!!!!!

பிரதமர் Jean Castex மருத்துவமனை ஒன்றுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார் Val-d’Oise மாவட்டத்தில் உள்ள Argenteuil மருத்துவமனைக்கே இவ்வாறு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

முன் அறிவித்தல் ஏதுமின்றி அவர் நேற்று மாலை 7.15 மணிக்கு அங்கு சென்றிருந்தார் குறித்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்ற பிரதமர் அங்கு சிகிச்சை முறைகளை பார்வையிட்டார்.

அங்கு 70 கொவிட் 19 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள் தாதியருக்கு தமது வாழ்த்துக்களையும் ஆதரவினையும் பிரதமர் தெரிவித்தார் மேலும் மருத்துவமனை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பிரதமர் கேட்டறிந்துகொண்டார்.