இப்படி தான் மாஸ்டர் விஜய் என்னை கூப்பிடுவார்!! மனம் திறந்து கூறிய நடிகை!!!

போக்கிரி பொங்கலை போல பலத்த எதிர்பார்ப்புடன் மாஸ்டர் பொங்கல் தயாராகி வருகின்றது.

இன்று கோலிவுட்டில் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை மாஸ்டர் தான். ஏப்ரலில் ரிலீஸ் ஆகவேண்டிய படம், எனினும் சுமார் 10 மாதங்களாக முடிந்த படத்தை கையில் வைத்துக்கொண்டு காத்திருந்தனர்.

மாஸ்டர் படத்தின் டிக்கெட் முன்பதிவு உலகம் முழுவதும் நடந்து வருகிறது. படத்தை நாளை ரசிகர்கள் திரை அரங்கில் காண ஆர்வமாக உள்ளனர். படக்குழுவும் முழுவு வீச்சில் ப்ரோமோஷனில் இறங்கியுள்ளனர்.

படத்தின் ஹீரோயின் மாளவிகா மோகன். சினிமாவில் ஆரம்ப ஸ்டேஜிலேயே சூப்பர் ஸ்டார், தளபதி என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு அசத்தி வருகிறார். இந்நிலையில் இவர் ரசிகர்களுடன் ட்விட்டரில் கேள்வி பதில் செக்ஷனில் கலந்துகொண்டார்.

ரசிகர்களின் கேள்விக்கு அசத்தலாக பதில் தந்து வந்தார்.அப்பொழுது ரசிகர் ஒருவர், ” விஜய் அண்ணா உங்களை ஷூட்டிங் ஸ்பாட்டில் மல்லு அல்லது மாளவிகா என எப்படி கூப்பிடுவார்.” என கேட்டார்.

அதற்கு மாலு என்று தான் விஜய் சார் என்னை அழைப்பார் என பதிவிட்டுள்ளார். தற்பொழுது “மாலு, மாலு” ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்