🔴 🇱🇰 மதுபானப் பிரியரர்களுக்கு மகிழ்சியான செய்தியை அறிவித்தது இலங்கை அரசு….!!!!

இணையத்தளம் ஊடாக நுகர்வோருக்கு மதுபானம் விற்பனை செய்வதற்கு நிதி அமைச்சு இன்று அனுமதி வழங்கியுள்ளது இந்த விடயம் தொடர்பில் தமது பரிந்துரைகளை நிதி அமைச்சுக்கு அனுப்பிய நிலையிலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டதாக மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்குமாறு பல்பொருள் அங்காடிகளினால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையிலேயெ இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் இணையத் தளம் ஊடாக மதுவினை கொள்வனவு செய்வதற்கு நுகர்வோருக்கு முடியுமென மதுவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.