🇫🇷 🔴பிரானசில் பல மாவட்டங்கள் கடும்வெள்ளத்தினால் பாதிப்பு.!!!!

நேற்று மாலை இல் து பிரான்சுக்குள் பல மாவட்டங்கள் கடும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன நேற்று சனிக்கிழமை மாலை 4 மணிமுதல் இரவு 10 மணிவரை நாடு முழுவதும் 51 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை Météo France வெளியிட்டிருந்தது.

இதில் இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்களும் பாதிக்கப்பட்டிருந்தனர் குறிப்பாக Val-de-Marne மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக இருவர் காயமடைந்தன Alfortville நகரின் rue de Grenoble வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றின் கூரை புயல் காரணமாக பறந்துள்ளது.

அதன்போதே இருவர் காயமடைந்ததாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர் அதேவேளை அங்கு பொது போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டன. RER A, RER C, RER E மற்றும் Transilien P ஆகிய சேவைகளும் குறித்த நேரத்தில் முற்றாக தடைப்பட்டுள்ளன.

பரிசில் மாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணிவரையான ஒருமணிநேரத்தில் 130 மின்னல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன அதேவேளை, Essonne மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களும் வெள்ளத்தில் மூழ்கியிருந்தன. ஒரு சில பகுதிகளில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளன.