Pierrelaye நகரில் இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது நபர் ஒருவரை வீடு ஒன்றில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையை காவல்துறை அதிகாரி ஒருவர் மேற்கொண்டிருந்தார் ஆனால் அச்சம்பவம் அமைதியாக நடைபெறுவதற்கு மாறாக குறித்த நபர் கத்தி ஒன்றை உருவி எடுத்து காவல்துறை அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அத்தோடு மிகவும் ஆக்ரோஷமாகவும் நடந்துகொண்டார் இதனால் அவரை சமாளிக்கும் நோக்கோடு காவல்துறை அதிகாரி தனது மின்சார பிஸ்டல் வகை துப்பாக்கியால் அவரை நோக்கி சுட்டுள்ளார்.
இதில் இலக்குவைக்கப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து சாவடைந்தார் மருத்துவ உதவிக்குழுவினர் 30 நிமிடங்கள் வரை போராடி அவரை மீட்க முயற்சித்தனர் ஆனால் அவரது இருதயம் மீண்டும் உயிர்கொள்ளவில்லை.
இது தொடர்பான விசாரணைகளை காவல்துறைக்கான காவல்துறையான IGPN அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
- ⚫🇫🇷பிரான்ஸில் மூன்று மாதத்தில் மூன்றாவது தடுப்பூசி! வெளியான அறிவிப்பு!
- ⚫🇫🇷செம்மஞ்சள் எச்சரிக்கையில் ile-de-France!
- ⚫🇫🇷பிரான்ஸ் சுகாதார அமைச்சரின் புதிய திட்டம்! ஜனவரி முதல் ஆரம்பம்!
- ⚫இலங்கையின் ஹோட்டலில் மாணவனுடன் தங்கிய மாணவி! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
- ⚫இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு! 3000 கோழிகள் தீக்கிரை!