🇫🇷 🔴 மெற்றோ புகையிரதநிலையத்தில் ஒருவர் படுகொலை..!!!

நேற்று சனிக்கிழமை இரவு 10.20 மணி அளவில் Bercy தொடருந்து நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது காவல்துறையினரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி ஆறாம் இலக்க மெற்றோ நடைமேடையில் வைத்து இரு நபர்களுக்கிடையே மோதல் இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலின் போது ஒருவர் இரண்டாமவரை கத்தியால் குத்தியுள்ளார் கத்தியால் குத்தியவரை தண்டவாளத்தில் தள்ளிவிட்டு தன்னை காப்பாற்றிக்கொள்ள முயன்றுள்ளார் ஆனால் அவர் மீண்டும் கத்தியால் இரண்டாவது தடவை குத்தியுள்ளார்.

படுகாயமடைந்த அவர் சில நிமிடங்களில் சாவடைந்துள்ளார்.தாக்குதல் நடத்திய நபரை RATP காவலர்கள் கைது செய்தனர் விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.