பரிசில் மோட்டார் சைக்கிள் ஓட்டுணர்கள் நேற்று ஆர்ப்பாட்டம்.!!!!!

பரிசில் நேற்றைய தினம் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் நாடு முழுவதும் உள்ள பல நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தபோதும் பரிசில் மிக அதிகளவானவர்கள் கலந்துகொண்டு வீதிகளை முடக்கினர்.

கிட்டத்தட்ட 6.000 பேர் வரை பரிசில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது Fédération française des motards en colère (FFMC) அமைப்பைச் சேர்ந்தவர்களே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டம் பின்னர் சுற்றுவட்ட வீதியை நெருங்கி பலத்த போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியிருந்தது.

மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாட்டினை எதிர்த்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது கடந்த பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்தி இல் து பிரான்ஸ் மாகாணம் உள்ளிட்ட சில பகுதிகளில் Voie-Raide சாலைகளில் வாகனங்களுக்கிடையே பயணிக்க (Inter-files) அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அது €135 யூரோக்கள் தண்டப்பணம் மற்றும் ஓட்டுனர் உரிமத்தில் இரண்டு புள்ளிகளையும் இழக்கச் செய்யும் குற்றமாகும் இந்த சட்டத்தினை கண்டித்தே நேற்றைய நாளில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.