🔴 🇱🇰 இலங்கையில் கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்ட மூவர் உயிர்இழப்பு….!!! அதிர்சியில் மக்கள்..!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை எட்டவுள்ளது தற்போது கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி இலங்கையிலும் பாதிக்கப்பட்ட மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டது.

இலங்கையில் இதுவரையில் 7 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.எனினும் அவர்களில் மூவர் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக கொவிட் தடுப்புக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவிக்கின்றார்.

தடுப்பூசியினால் ஏற்பட்ட பக்க விளைவுகள் காரணமாக அவர்கள் உயிரிழக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் இலங்கையில் 7,73,000 பேர் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட இருவருக்கு மூன்று அல்லது நான்கு நாட்களின் பின்னர் மாரடைப்பு ஏற்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார் மற்றும் தடுப்பூசி பெற்றுக்கொண்ட தேரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார் குறித்த தேரரின் உயிரிழப்பிற்கு காரணம் வலிப்பு நோய் என கூறப்பட்டது.