திருமதி மக்ரோனிற்கு கொரோனா தொற்று உறுதி….!!!!!

ஜனாதிபதி எமானுவல் மக்ரோனின் துனைவியாரான பிரிஜித் மக்ரோனிற்கும் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது.நத்தார் தின இரவிற்கு முதல், அதாவது டிசம்பர் 24ம் திகதி, பிரிஜித் மக்ரோனிற்குச் செய்யப்பட்ட கொரோhதச் சோதனையில், பிரிஜித் மக்ரோனிற்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்படடிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி எமானுவல் மக்ரோனிற்கான கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டுச் சில நாட்களில், 67 வயதுடைய பிரிஜித் மக்ரோனிற்கும் தொற்றுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர் முற்றாகக் குணமடைந்து உள்ளதாக, பிரான்சின முதற்பெண்மனியான பிரிஜித் மக்ரோன் அவர்களின் அலுவலகம் அறிவித்துள்ளது