🔴 🔴 🇫🇷 எதிர் வரும் புதன்கிழமையிலிருந்து பிரான்ஸ்ல் பொது முடக்கமா………!!!

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் மூன்றாவது அலை பிரான்சை ஆட்கொண்டுள்ள இவ்வேளையில் 90 வீதமான தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டில்கள் மருத்துவமனைகளில் நாடாளாவியரீதியில் நிரம்பியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 7 665 தீவிரசிகிச்சைக் கட்டிகள் உள்ளன கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 4 872 பேர் உள்ளடங்க இதர நோயாளர்களுடன் 6 833 கட்டில்கள் பாவனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது அதிகரித்துச் செல்கின்ற வைரஸ் தொற்றுவீச்சு வரும் நாட்களில் வாரங்களில் நிலைமையினை மோசமடையச் செய்யும் என மருத்துவமனை வட்டாரங்கள் எச்சரித்துள்ளதோடு பாரிஸ் பிராந்திய 41 மருத்து வமனை பொறுப்பதிகாரிகள் பொதுமுடக்கம் ஒன்றுக்கான அழைப்பினை அரசாங்கத்தினை நோக்கி முன்வைத்துள்ளனர்.

நாட்டின் பொருளாதாரம் சமூக உளவியல் நிலைமைகளை கருத்தில் கொண்டு இயன்றவரை முழுமையான பொதுமுடக்கத்தினை அரசாங்கம் முனைப்புக்காட்டி வருகின்றது குறிப்பாக பாடசாலைகளில் அதிகித்துச்செல்கின்ற வைரஸ் தொற்று பெரும் விவாதத்தினை பொதுதளத்தில் ஏற்படுத்தியும் வருகின்றது.

இந்நிலையில் எதிர்வரும் புதன்கிழமை அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குகின்ற வள அறிஞர் குழுவினருடனான சந்திப்பினைத் தொடர்ந்து அரசுத் தலைவர் ஏமானுவல் மக்ரோன் முழுமையான பொதுமுடக்கத்துக்கு அழைப்பினை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.