⚫🇫🇷Seine-et-Marne மாவட்டத்தில் முகக்கவசம் கட்டாயமல்ல!

Seine-et-Marne மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல எனும் தளர்வு கொண்டுவரப்பட உள்ளது. இம்மாதம் (மே) 19 ஆம் திகதி முதல் இந்த தளர்வு நடைமுறைக்கு வருகின்றது. 19 ஆம் திகதி முதல் கடைகளும், உணவக முற்றங்களும் திறக்கப்பட உள்ள நிலையில், இந்த கட்டுப்பாடும் தளர்த்தப்பட உள்ளன. முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை எனவும், விருப்பப்பட்டால் அணியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் கடந்த மார்ச்-ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு 100,000 பேருக்கும் 737 பேருக்கு தொற்று ஏற்பட்டு வந்த நிலையில், இன்று ஒவ்வொரு 100,000 பேருக்கும் 218 பேருக்கு மாத்திரமே தொற்று ஏற்படுகின்றது என்பதால் இந்த முடிவு எட்டப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த Seine-et-Marne மாவட்டத்தில் அனைத்து இடங்களுக்கும் இந்த கட்டுப்பாடு தளர்வு இல்லை எனவும், சில பகுதிகளுக்கு முகக்கவசம் தொடர்ந்தும் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.