🇫🇷 முக்கிய செய்தி.! பிரான்ஸ் ஜனாதிபதி மீது தாக்குதல்.!!!

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மீது தாக்குதல் முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது நேற்று வெள்ளிக்கிழமை நண்பகலின் பின்னர் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் Lourdes Hautes-Pyrénées நகருக்கு பயணமாகியிருந்தார்.

அங்கு மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை பங்குதாரர்களை சந்தித்து உரையாடினார் அப்போது மாலை 4.30 மணி அளவில் நபர் ஒருவர் ஜனாதிபதியை தாக்க முற்பட்டார் ஜனாதிபதியை மக்களும் ஊடகத்தினரும் சூழ்ந்திருக்கும் போதும் திடீரென ஒருவர் வெட்கம் நீங்கள் ஒரு முழுமையான நாத்திகர் என கோஷமிட்டுக்கொண்டு ஜனாதிபதியை தாக்க முற்பட்டுள்ளார்.

ஆனால் கூட்டம் சுற்றி இருந்ததால் அவரால் ஜனாதிபதியை நெருங்கமுடியவில்லை அதற்குள்ளாக அவரை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர் அவரால் ஜனாதிபதியை தொட முடியவில்லை அவரை கைது செய்ய முற்படும் போது மற்றொரு நபர் இலேசான காயங்களுக்கு உள்ளானதாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. தாக்குதல் நடத்த முற்பட்டவர் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் ஜூன் 8 Tain-l’Hermitage Drôme நகருக்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டிருந்தபோது 28 வயதுடைய ஓருவர் ஜனாதிபதியின் கன்னத்தில் அறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.