🔴🇫🇷பிரான்ஸில் கொரோனா வைரசில் இருந்து மீண்ட 117 வயது மூதாட்டி!

117 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளார்.

சகோதரி André (Sœur André) என அழைக்கப்படும் இவ் மூதாட்டியே பிரான்சின் மிக வயதான மற்றும் ஐரோப்பாவின் மிக வயதான பெண்மணி ஆவார். தனது 117 ஆவது பிறந்தநாளுக்கு ஓரிரு நாட்களே உள்ள நிலையில், கடந்த ஜனவரி 16 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தார்.

எனக்கு தொற்று ஏற்பட்டதை நான் உணரவே இல்லை! என Sœur André குறிப்பிட்டார்.

இந்நிலையில், அவர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக மீண்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. Toulon நகரில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றில் வசிக்கும் இவரோடு சேர்த்து மொத்தம் 88 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது. அவர்களில் 10 பேர் சாவடைந்துள்ளனர்.

1904 ஆம் ஆண்டு பிறந்த இப்பெண்மணி முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போரை கண்டு வந்தவதோடு, தற்போது கொரோனா வைரசிடம் இருந்தும் குணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.