🇫🇷 பிரான்சில் நான்காம் தொற்று அலை பல மாவட்டங்களுக்கு பரவுகின்றது.!!!

Pyrénées-Orientales மாவட்டத்தில் கொரோனா தொற்று விகிதம் 250 ஐ தாண்டிய நிலையில் நாடளாவிய ரீதியில் தொற்று விகிதம் 50 ஐ கடந்துள்ளது பொது சுகாதார துறை வெளியிட்ட தரவுகளின் படி 23 மாவட்டங்களில் தொற்று விகிதம் ஒவ்வொரு 100.000 பேருக்கும் 53.2 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட மாற்றம் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் இல் து பிரான்சுக்குள் உள்ள அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்குகின்றன தென்மேற்கு மாவட்டங்களும் இந்த பட்டியலில் உள்ளன Pyrénées-Orientales மாவட்டத்தில் தொற்று விகிதம் 256.8 ஆக உயர்வடைந்துள்ளது.

அங்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. Haute-Corse மாவட்டத்தில் 183.8 விகிதமாக கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.இறுதியாக ஜூன் 3 தொடக்கம் 9 ஆம் திகதிகளில் தொற்று விகிதம் 50 இற்கு மேல் பதிவாகியிருந்ததமை குறிப்பிடத்தக்கது.