⚫🇫🇷பிரான்ஸில் சென் நதிக்கரையில் குவிந்த மக்கள்!

சென் நதிக்கரையில் குவிந்த மக்களை காவல்துறையினர் தலையிட்டு வெளியேற்றினர். Quais de Seine பகுதியில் இன்று காலை நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். மிதமான வெப்பநிலை நிலவியதை அடுத்து மக்கள் கூட்டம் கட்டுப்பாட்டை மீறி ஒன்றுகூடினர். ஆனால் சில நிமிடங்களில் காவல்துறையினரும் சம்பவ இடத்தில் குவிந்து மக்களை வெளியேற்றினர்.

சமூக இடைவெளிகளை கடைப்பிடிக்காததால் அவர்களை கலைந்து செல்ல காவல்துறையினர் பணித்தனர். இப்பகுதியில் மது அருந்துவதற்கு முன்னதாகவே தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று அது குறித்த சோதனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.