கொழும்பு மாநகரில் மக்களுக்காக புதிய திட்டம்!!!!

கொழும்பு நகரில் குடிசைவாழ் மக்களுக்கென புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்டதாக 68 ஆயிரத்து 894 குடிசை வீடுகள் காணப்படுகின்றன.இதில் 18 ஆயிரத்து 884 பேருக்கென புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய குடும்பங்களுக்கு புதிய வீடுகள் விரைவில் நிர்மாணித்துக்கொடுக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை நடுத்தர வர்க்கத்தினருக்காக முன்னெடுக்கப்படும் ஐயாயிரம் வீட்டுத்திட்டத்தின் முதற்கட்டமாக மூவாயிரம் வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் நாளையதினத்துடன் நிறைவடையவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.