பிரான்சில் தற்போதைய கொரோனா நிலவரம்.!!!

கொரோனா வைரஸ் காரணமாக பதிவான தொற்று மற்றும் சாவு விபரங்கள் தற்போது பொது சுகாதார துறையினால் வெளியிடப்பட்டுள்ளது அதன்படி நேற்று செவ்வாய்க்கிழமை (பெப்ரவரி 23) மாலை வெளியான தகவல்களின் படி நேற்றைய நாளில் 20.064 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மொத்தமாக தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3.629.891 ஆக உயர்வடைந்துள்ளது அதேவேளை தொற்று எண்ணிக்கையும் கடந்த சில நாட்களாக அதிகரித்தே வருகின்றது.

திங்கட்கிழமை 6.4% ஆக இருந்த தொற்று வீதம் தற்போது 6.5% ஆக அதிகரித்துள்ளது கடந்த 7 நாட்களில் 9,362 பேர் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அவர்களில் 1.804 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் நேற்றைய நாளில் 314 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர்.