பிரான்சில் கொரோனாவால் தற்போதைய நிலவரம்.!!!!

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது பதிவாகியுள்ள தொற்று மற்றும் சாவு விபரங்கள் இதோ இது மார்ச் 3 ஆம் திகதி நேற்று மாலை வெளியிடப்பட்ட பட்டியல் ஆகும் கடந்த 24 மணிநேரத்தில் 26,788 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இத்தோடு பிரான்சில் பதிவான ஒட்டுமொத்தமாக 3,810,316 பேருக்கு தொற்று ஏற்படுள்ளது.

தொற்று வீதமும் தினமும் உயர்வடைந்தே வருகின்றது தற்போது 7.3% ஆக தொற்று வீதம் உள்ளது தற்போது 25.111 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் 3.637 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணிநேரத்தில் 322 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் கடந்த சில வாரங்களில் ஒரே நாளில் பதிவாகும் அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.

அதேவேளை 326 பேர் கடந்த 24 மணிநேரத்தில் சாவடைந்துள்ளனர் மொத்தமாக 87.568 பேர் கொரோனா வைரஸ் காரணமாக சாவடைந்துள்ளனர் இவர்களில் 62.595 பேர் மருத்துவமனைகளில் சாவடைந்துள்ளனர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை நேற்றைய தினம் வெளியிடப்படவில்லை மார்ச் 2 ஆம் திகதி வரை 3,133,478 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.