⚫ஒமிக்ரோன் வைரஸ் கதி கலங்கி நிற்கும் அமெரிக்கா! பதிவானது முதல் மரணம்!

ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான ஒருவர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளார்.டெக்ஸாஸ் மாநிலத்தில் இந்த மரணம் பதிவாகியுள்ளதுடன் குறித்த நபர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் ஒமிக்ரோனினால் ஏற்பட்ட முதலாவது மரணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
மரணித்த நபரின் வயது 50ற்கும் 60ற்கும் இடைப்பட்டதாக இருக்குமென அமெரிக்க சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமையினால் தொற்றுக்குள்ளாகி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

டிசம்பர் 18 ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒரு வாரத்தில் பதிவான கொரோனா தொற்றாளர்களில் 73 வீதமானவை ஒமிக்ரோன் தொற்று என கூறப்படுகின்றது.