🔴🇱🇰 வவுனியாவில் பட்டபகலில் கத்திமுனையில்பகற் கொள்ளை…..!!!!

இலங்கையில் வவுனியா புளியங்குளம் பகுதியில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை ஒன்பது இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையிட் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது அதனையடுத்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நேற்றையதினம் விவசாயிகளிடமிருந்து நெல்லினை கொள்வனவு செய்வதற்காக ஒருதொகைப்பணத்துடன் நபர் ஒருவர் சென்றபொழுது அவரை புளியங்குளம் முல்லைத்தீவு பிரதான வீதியில் வழிமறித்த குழுவினர் அச்சுறுத்தி அவரிடமிருந்த 9 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபரால் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது இது தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.