⚫🇫🇷அதிபர் மக்ரோன் யூரியூப்’ இரட்டையர்களுக்கு பகிரங்கச் சவால்!

மக்களை விழிப்பூட்ட முன்வருமாறு
பிரபல ‘யூரியூப்’ இரட்டையர்களுக்கு
அதிபர் மக்ரோன் பகிரங்கச் சவால்!

பிரான்ஸ் அரசுத் தலைமை கொரோனா வைரஸுக்கு எதிரான போருக்கு இரண்டு பிரபல இணைய நட்சத்திரங்களின் உதவியை நாடியுள்ளது.

பத்து மில்லியன் மக்களை விழிப்பூட்டும் காணொலி ஒன்றைப் படைக்க முன்வரு மாறு பிரான்ஸின் பிரபல யூரியூப் இரட் டையர்களுக்கு (YouTubers) அழைப்பு விடுத்துள்ளார் அதிபர் மக்ரோன்.

பிரான்ஸில் ஆறு மில்லியன்களுக்கும் அதிக(6.24 million) பயனாளர்களைக் கொண்ட பிரபல இணைய நட்சத்திரங் களான (YouTubers) மக்பிளை மற்றும் கார்லிற்றோ (McFly and Carlito) ஆகிய இரட்டையர்களிடமே நாட்டின் அதிபர் இவ்வாறு பகிரங்கச் சவாலை விடுத்திருக்கிறார். அதனை அவர்கள் இருவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஒன்று கூடல்களைத் தவிர்ப்பது, சமூக இடைவெளி மற்றும் நாளாந்தம் கடைப்பிடிக்கக் கூடிய சாதாரண சிறிய சுகாதாரப் பழக்க வழக்கங்களை மக்கள் பின்பற்றத் தூண்டும் வகையிலான காணொலி ஒன்றைத் தயாரிக்குமாறு இரட்டையர்களுக்கு பகிரங்கச் சவால் விடுத்துள்ள அதிபர், அதன் மூலம் பத்து மில்லியன் பார்வையாளர்களை திரட்டி சவாலை நிறைவேற்றினால் இருவரும் எலிஸே மாளிகைக்குள் நுழைந்து வீடியோ படப்பிடிப்பு செய்ய முடியும் என்றும் அறிவித்துள்ளார்.

அரசுத் தலைமையின் சவாலை ஏற்றுள்ள இருவரும் அதனை நிறைவேற்றுவது தொடர்பில் பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளனர். பத்து மில்லியன் பார்வையாளர்களைத் திரட்டி சவாலை நிறைவேற்றி எலிஸே மாளிகைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டால் அங்கு எத்தகைய காணொலியைத் தயாரிக்க இடமளிக்கப்படும் என்பதையும் இருவரும் இப்போதே அரசுடன் பேசித் தீர்மானித்துக் கொள்ள விரும்புகின் றனர்.

பிரான்ஸில் லட்சக்கணக்கான இளையோரை பயனாளர்களைக் கொண்டுள்ள மக்பிளை மற்றும் கார்லிற்றோ இருவரும் கடந்த ஆண்டில் தங்கள் காணொலி ஊடாக மருத்துவ மனைகளின் சுகாதாரப் பணியாளர் களுக்கு நிதி திட்டுவதற்கு எடுத்த முயற்சி பெரும் வெற்றியீட்டியது. “maradon” என்னும் காணொலி ஊடாக அவர்கள் நான்கு லட்சம் ஈரோக்களைத் திரட்டி சாதனை புரிந்தனர்.