🇫🇷 பிரான்ஸில் Alpes- Maritimes நகரில் வாழும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு……!!!! பல ஊரடங்கு மற்றும் பல கட்டுப்பாடுகள் விதிப்பு….!!!!!

Alpes-Maritimes பகுதியில் 100.000 பேரில் 750 பேரிற்குக் கொரோனத் தொற்று என மிகவும் அதி உச்சத்தை அடைந்திருப்பதால் அங்கு மட்டும் புதிய கொரோனாக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது 100.000 பேரில் 200 பேரிற்குக் கொரோனத் தொற்று (taux d’incidence) இருந்தாலே தேசிய அளவில் அது மிகவும் ஆபத்தான நிலைமை எனக் கணிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

இங்குள்ள கடற்கரை நகரங்களான Menton இலிருந்து Théoule-sur-Mer வரையான பகுதிகளிற்கு வார இறுதிகளில் முழுமையான உள்ளிருப்புக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன 5000 m² அளவிற்கு அதிகமான வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட உள்ளன.

உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் வர்த்தக நிலைங்கள் மருந்தகங்கள் போன்றவற்றிற்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது 18h00 மணியிலிருந்தான ஊரடங்கு மிகவும் கடுமையாகக் கண்காணிக்கப்பட உள்ளது வர்த்தக நிலையங்களிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன இந்தப் பகுதிநேர வார இறுதிகளிலான உள்ளிருப்பு முதன் முதலில் இங்கு தான் பரீட்சிக்கப்பட உள்ளது.