பிரான்சால் பல்வேறு பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன – “Gerald Darmanin” தெரிவுப்பு.!!!

இல் து பிரான்சுக்குள் பல்வேறு பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் நேற்று புதன்கிழமை மார்ச் 3 ஆம் திகதி இத்தகவலை அவர் வெளியிட்டார் கடந்த சில வாரங்களில் பல்வேறு இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன.

பிரிவினைவாதத்தை தூண்டும் முகமாக செயற்பட்ட அல்லது பிரச்சாரம் மேற்கொண்ட பள்ளிவாசல்களே இவ்வாறு மூடப்பட்டுள்ளன இதுவரை மொத்தமாக 89 பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன ஏற்கனவே இல் து பிரான்சுக்குள் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் மூடப்பட்ட நிலையில் கடந்த வாரங்களில் மேலும் பத்து பள்ளிவாசல்கள் மூடப்பட்டதாக உள்துறை அமைச்சர் Gerald Darmanin தெரிவித்தார்.