🇱🇰மக்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர்! நீதிமன்றம் அதிரடி!

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றினை அவமதித்த காரணத்திற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்ப்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சங்கைக்குாிய மாகல்கந்தே சுதந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை உத்தியோகத்தரான சுனில் பெரேரா ஆகியோரால் உச்ச நீதிமன்றத்தில் புகார் செய்யப்பட்டதையடுத்து சட்ட மா அதிபரால் பிரதிவாதியான ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக குற்றப்பத்திாிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேலும் சில தினங்களுக்கு முன் என்னிடம் நிறைய பணம் இருக்கிறது, பணம் தேவைப்படுவோர் எனது செயலாளரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என காணொலி வெளியிட்டு மக்களுக்கு ,பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் எனப்து குறிப்பிடத்தக்கது.