🇫🇷பிரான்ஸின் ஜனாதிபதியின் அறிவுப்பு தொடர்பாக…..பாரளுமன்றத்தில் விவாதம்.!!!!

ஜனாதிபதி அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான விவாதம் ஒன்று இன்று காலை பாராளுமன்றத்தில் இடம்பெற உள்ளது நாளை வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இருந்து நாடு முழுவதும் உள்ளிருப்பு நடைமுறைக்கு வருகின்றது.

ஜனாதிபதி இதனை அறிவித்திருந்தார் இந்த அறிவிப்புகளை அடுத்து இது தொடர்பான விவாதம் இன்று பாரளுமன்றத்தில் இடம்பெற உள்ளது காலை 9 மணிக்கு இடம்பெற உள்ள இந்த இரண்டுமணிநேர விவாத்தில் LREM கட்சியினருக்கு 30 நிமிடங்களும் LR கட்சிக்கு 20 நிமிடங்களும் மீதமான கட்சிகளுக்கு தலா 10 நிமிடங்களும் வழங்கப்பட உள்ளன.

அதேவேளை நண்பகலின் பின்னர் செனட் மேற்சபையிலும் இது தொடர்பான விவாதம் ஒன்று இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.