பரிசில் அதிகரிக்கும் குழு மோதல்.! சிறுவர்கள் படுகாயம்.!!!

பரிசில் இடம்பெற்ற குழு மோதல் ஒன்றில் ஐந்து சிறுவர்கள் காயமடைந்துள்ளனர் நேற்று செவ்வாய்க்கிழமை மார்ச் 9 ஆம் திகதி நண்கபலின் பின்னர் இந்த குழு மோதல் இடம்பெற்றுள்ளது 16 ஆம் வட்டாரத்தில் உள்ள Porte d’Auteuil மற்றும் Parc des Princes ஆகிய இரு இடங்களிலும் இடம்பெற்றுள்ளது.

காவல்துறையினர் தலையிட்டு மோதலை தடுத்தாலும் நிலமை முன்னதாகவே கட்டுப்பாட்டை மீறி மோசமாகியிருந்தது மோதலில் பதின்ம வயதைச் சேர்ந்த 5 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் மூவர் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்திங்கட்கிழமை நண்பகலுக்கு பின்னர் Champigny-sur-Marne நகரில் குழு மோதல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.