பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது !! நாளை ஆரம்பம். !!!

கல்வி பொதுத்தராதர சாதாரணதர தரப் பரீட்சை நாளைய தினம் ஆரம் பமாகவுள்ள நிலையில் தற்போது சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப் பட்டுள்ளதாக என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார் அத்துடன் இம்முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுத் தனி மைப்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக விசேடமாகப் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காகச் சகல மாவட்டங்களிலும் உள்ளடக்கும் வகையில் நாடு பூராகவும் 40 க்கும் மேற்பட்ட விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது நாடளாவிய ரீதியில் 4513 பரீட்சை நிலையங்களில் 6 இலட்சத்து 22 ஆயிரத்து 352 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.