⚫🇫🇷விசேட செய்தி! தலைநகர் பாரிஸில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்!

பரிசில் உள்ள வீதிகள் அனைத்திலும் அதிகபட்சமாக 30 கிலோமீற்றர் வேகத்தில் மட்டுப்படுத்தப்பட உள்ளன.
பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ, தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த வேக கட்டுப்பாடு தொடர்பாக வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன்படி, வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் இருந்து பரிசில் அதிகபட்ச வேகமாக மணிக்கு 30 கி.மீ ஆக மட்டுப்படுத்தப்பட உள்ளதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சுற்று வட்ட வீதி உள்ளடங்காது. தலைநகரில் பதிவாகும் அதிகபட்ச சுற்றுச்சூழல் மாசடைவுக்கு எதிரான மிகப்பெரிய புரட்சியாக இது இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.