⚫🇫🇷பாரிஸில் பதற்றம்! சுற்றுலாப்பயணி மீது பயங்கர தாக்குதல்!

மத்திய பரிசில் இன்று சுற்றுலாப்பயணி ஒருவர் மீது தாக்குதல் தாக்குதல் இடம்பெற்றதை அடுத்து, வீதி தடை ஏற்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கானவர் ஸ்பெயின் நாட்டினைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி ஆவார். Hôtel de Ville இற்கு அருகே உள்ள வாடகை மிதிவண்டி தரிப்பிடம் ஒன்றில் வைத்து குறித்த பயணியை ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். Vélib வாடகை மிதிவண்டியை எடுத்துக்கொள்ள குறித்த பயணி அங்கு வந்திருந்த போது, அதே மிதிவண்டியை எடுத்துக்கொள்ள மற்றுமொருவரும் அங்கு வந்துள்ளது.

இருவரில் யார் அதை எடுத்துகொள்வது என ஆரம்பித்த வாக்குவாதம், கத்திக்குத்தில் சென்று முடிந்துள்ளது.
இரண்டாம் நபர் கூரான ஆயுதம் ஒன்றினால் ஸ்பெயின் பயணியை குத்தியுள்ளார். தொண்டையில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தாக்குதலாளியை காவல்துறையினர் உடனடியாக கைது செய்தனர். அவர் மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியை தவிர்க்கும் படி நகரசபை அறிவுறுத்தியுள்ளது.