நாட்டுக்கு உக்ரைன் பிரஜைகளை அழைத்து வந்ததன் மூலம் கொரோனா தொற்று பரப்பப்பட்டதாகவும் அதனால் ஏற்படும் உயிர் பலிகளுக்கு பசில் ராஜபக்ஷ பொறுப்பு கூற வேண்டும் எனவும் தெரிவித்து உலப்பனே தேரர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவியுள்ள 195 நாடுகளில் கொரோனா குறித்து பதிவு செய்யப்பட்ட முதலாவது வழக்காக பசில் ராஜபக்ஷ மீதான வழக்கு காணப்படுகிறது. தேரரின் இந்த வழக்கால் அமெரிக்கா சென்றுள்ள பஸில் நாடு திரும்பியதும் கைது செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு தென்னிலங்கையில் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளைபசில் ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்த உலப்பனே சுமங்கல தேரரின் செயற்பாடு கீழ்த்தரமானது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் வௌியிட்டுள்ளனர். கொரோனா மரணங்களில் அரசியல் செய்யும் நாடாக இலங்கை முழு உலகிற்கும் காண்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கில் உலப்பனே தேரர் முன்னெடுத்துள்ள இந்த செயற்பாடு வெறுக்கத்தக்கது எனவும் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- ⚫🇫🇷பிரான்ஸில் மூன்று மாதத்தில் மூன்றாவது தடுப்பூசி! வெளியான அறிவிப்பு!
- ⚫🇫🇷செம்மஞ்சள் எச்சரிக்கையில் ile-de-France!
- ⚫🇫🇷பிரான்ஸ் சுகாதார அமைச்சரின் புதிய திட்டம்! ஜனவரி முதல் ஆரம்பம்!
- ⚫இலங்கையின் ஹோட்டலில் மாணவனுடன் தங்கிய மாணவி! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
- ⚫இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு! 3000 கோழிகள் தீக்கிரை!