🇫🇷 பேனாவடிவில் துப்பாக்கி…..!!!! மூன்று உயிர் தப்பியது பிரான்ஸில் பதற்றம்..!!

பிரான்ஸில் நேற்று [22.02.2021] 20h30 மணியளவில் நீசிலுள்ள மருத்தவமனையின் அவசர சகிச்சைப் பகுதிக்கு, துப்பாக்கிக் குண்டுக் காயத்துடன் ஒருவர் கொண்டு வரபட்டுள்ளார் அவரிற்கு அவசரமாக சத்திர சிகிச்சைய்ய வேண்டி இருந்தால் உடனடியாக அவர் சத்திரிசிகிச்சைக்குக் கொண்டு செல்லப்பட்டமையால் அங்கிருச்த மருத்துவத் தாதியிடம் அவரின் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

அவற்றைக் கணக்கெடுத்து பதிவில் வைப்பதற்காக மருத்துவத் தாதி அவரின் பெருட்களை எடுத்தபோது அதிலிலிருந்த ஒரு பேனாவை எடுத்தபோது அது அழுத்தப்பட்டதால் அதிலிருந்து துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது.

துப்பாக்கிக் குண்டு பாய்ந்து மருத்துவத் தாதியின் கை காயப்பட்டதுடன் அவருடன் நின்ற சக தாதியும் காயப்பட்டுள்ளார் ஆனால் அவர்களின் உயிரிற்கு ஆபத்தில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.